BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு 6 நாட்களில் மரண தண்டனை - காப்பாற்ற ஒரே இறுதி வாய்ப்பு என்ன?
கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செங்கடலில் சரக்கு கப்பலை சிறு படகுகள் மூலம் சூழ்ந்து மூழ்கடித்த ஹூதி படை - என்ன நடந்தது?
ஒரே வாரத்தில் இரண்டாவது கப்பலை செங்கடலில் மூழ்கடித்துள்ளது இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி படையினர்!
நேரலை, நிமிஷா பிரியாவை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம்.
வன உரிமைச் சட்டம் பழங்குடிகளின் உரிமையை அங்கீகரிப்பதால் காடுகள் அழிகிறதா? உண்மை என்ன?
வன உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடிகள் மற்றும் பிற சமூகங்களின் நில உரிமையை அங்கீகரிப்பது, காடுகள் அழிவுக்கு வித்திடுவதாக நீண்டகாலமாக கூறப்படுகிறது. உண்மையில், வன உரிமைச் சட்டம் என்றால் என்ன?
போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்தது குறித்த ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. பிபிசி சரிபார்த்த அந்த ஆடியோவில் என்ன இருக்கிறது?
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் கிடைத்துள்ள தூம்புக் கல்வெட்டுகள், சோழர்களின் நீர் மேலாண்மை தொடர்பான அதிசயங்களை வெளிப்படுத்தியுள்ளன.
காணொளி, விமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள் - பின்னர் நடந்தது என்ன?, கால அளவு 0,35
குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில் தனியார் விமானம் கிளம்புவதற்கு முன்பு தேனீ கூட்டம் ஒன்று ஒட்டியிருந்தது. தண்ணீரை அடித்து அந்த கூட்டத்தை கலைத்ததால் விமானம் புறப்பட தாமதம் ஆனது!
"அகோரி சிகிச்சை" : தாய்-மகளை ஒருவருடம் சிறை வைத்த மந்திரவாதி
மகாராஷ்டிராவில் ஒரு 16 வயது சிறுமியையும் அவரது தாயையும் ஒரு மந்திரவாதி, அகோரி சிகிச்சை என்ற பெயரில் ஒரு வருடம் ஒரு அறையில் பூட்டி வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
"இறந்து போன என் கணவரை, உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விட்டனர்" - உ.பி.யில் நடந்த காப்பீட்டு மோசடி
மேற்கு உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், காப்பீட்டுப் பணத்தை அபகரிக்க பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்ட பல கும்பல்களை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.
"19 வயதில் ஏமன் பயணம், 28 வயதில் கொலை வழக்கு" : நிமிஷா பிரியா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்ததாக குற்றம்சாட்ட்டப்பட்ட வழக்கில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தற்போது வரை நடந்துள்ளது என்ன என்பதை காலவரிசையுடன் விளக்குகிறது இந்தக் கட்டுரை.
லார்ட்ஸில் வெற்றி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இரு அணிகளின் பல, பலவீனம் மற்றும் தொடரின் நிலையை அலசுகிறது இந்தக் கட்டுரை.
காணொளி, டிரம்பின் கூடுதல் வரி: யாருக்கெல்லாம் பாதிப்பு? இந்தியாவின் நிலை என்ன?, கால அளவு 6,46
டிரம்பின் இந்த புதிய வரிவிதிப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நாடுகள் எவை? இந்தியா பற்றி டிரம்ப் கூறியது என்ன? போன்றவற்றை அலசுகிறது இந்தக் காணொளி.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கீழடி: மண்டை ஓடுகளின் அடிப்படையில் முகத்தை மறுஆக்கம் செய்தது எப்படி? ஆய்வாளர்கள் விளக்கம்
கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.
பிரபஞ்சத்தின் ஆழம் நோக்கும் ரூபின் - புதிய காணாத உலகங்களை காணும் தொலைநோக்கி
உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான, இருண்ட பகுதியைத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்தத் தொலைநோக்கி சூரிய மண்டலத்தின் நீண்டகால மர்மத்தை தீர்க்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இரான், இஸ்ரேல் சண்டையில் நடந்த 8 சம்பவங்கள் : 24 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள்
இரான் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது முதல் சமாதானம் அடைந்தது வரையிலுமான காட்சிகள் பரபரப்பு கொடுப்பதாக இருந்தன. இரான்-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வந்த அந்த 24 மணி நேரத்தில் நடந்தது 8 சம்பவங்களைக் காணலாம்.
பரங்கிப்பேட்டை போர் ஹைதர் அலி வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயர் எழுச்சிக்கும் வித்திட்டது எப்படி?
இந்திய வரலாற்றில், 1781ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்டோ நோவா போருக்கு (Battle of Porto Novo) ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்த போர்டோ நோவா என்ற கடற்கரையோரப் பகுதி தான், இப்போது கடலூர் மாவட்டத்தின் 'பரங்கிப்பேட்டை' என அழைக்கப்படுகிறது.
'உயரம் செல்ல உருவம் தடையில்லை' - மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி
விருதுநகர் அரசுப் பள்ளியில் படித்த உயரம் குறைவான மாற்றுத்திறனாளி மாணவியான யோகேஸ்வரி ஜெஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மும்பை ஐஐடியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
'20 லட்சம் பீப்பாய்கள்' - இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவில் என்ன நடக்கும்?
மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிற நிலையில் இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது பற்றி ஆலோசிப்பதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் என்ன, அது மூடப்பட்டால் இந்தியாவுக்கு இழப்புகள் ஏற்படுமா? என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
இஸ்ரேல் - இரான் மோதல் எவ்வாறு தொடங்கியது? அடுத்த கட்டம் என்ன?
கடந்த வாரம் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இரு தரப்பிலிருந்தும் கோபமான வார்த்தைப் பிரயோகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது இரானின் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையலாமா என்று பரிசீலித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த பா.ம.க., இந்த நிலைக்கு வந்தது ஏன்?
பா.ம.க. 1990களின் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருந்து வருகிறது. தற்போது உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டிருக்கும் பா.ம.க. தமிழக அரசியலில் முக்கியக் கட்சியாக நிலைபெற்றது எப்படி?
கூகுள் இணையத்தையே அழிக்கப் போகிறதா? அதன் புதிய AI என்ன செய்யும்?
கூகுள் புதிதாக அறிமுகப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு இணைய வெளியையே அழித்துவிடும் எனப் பலரும் அஞ்சுகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது?
கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்த உண்மை, 37 பேர் இறந்ததாக அரசு கூறியது, பிபிசி புலனாய்வில் குறைந்தது 82 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாக உத்தர பிரதேச அரசு கூறியது. ஆனால் நாடு முழுவதும் பிபிசி நடத்திய புலனாய்வில் குறைந்த பட்சம் இரண்டு மடங்குக்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் திமுக அரசை விளம்பரப்படுத்தும் கேள்விகளா? சர்ச்சையின் பின்னணி என்ன?
சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் திமுகவை விளம்பரப்படுத்தும் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி இவ்வாறு சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல. என்ன நடந்தது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்